ப்ரோக்கோலி ஆம்லெட் சண்ட்விச் - Broccoli Omelette on English Muffin - Kids Lunch Box Menu - 2
Posted by
GEETHA ACHAL
at
Sunday, July 21, 2013
Labels:
Lunch Box Menu,
அசைவம்,
கிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu,
சிற்றுண்டி
சமைக்க தேவைப்படும்
நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
:
·
ப்ரோக்கோலி
– 1 கப் (பொடியாக நறுக்கியது)
·
பூண்டு
– 2 பல் (தோல் நீக்கி நசுக்கி கொள்ளவும்)
·
சில்லி
ப்ளோக்ஸ் (Chilli Flakes) – 1 சிட்டிகை (விரும்பினால் )
·
முட்டை - 3
·
உப்பு
– தேவையான அளவு
·
ஆலிவ்
ஆயில் – சிறிதளவு
Sandwich செய்ய
:
·
English
Muffins / ப்ரெட் துண்டுகள் – 1
·
Cheese
– 2 Slices
செய்முறை :
·
Panயில் 1 தே.கரண்டி ஆலிவ் ஆயில் ஊற்றி சூடனாதும் பூண்டு + ப்ரோக்கோலி சேர்த்து 2 நிமிடம் வதக்கி
கொள்ளவும்.
·
முட்டையினை
உடைத்து ஒரு பவுலில் ஊற்றி கொள்ளவும். முட்டையுடன் 2 மேஜை கரண்டி தண்ணீர் + சிறிதளவு
உப்பு சேர்த்து நன்றாக Forkயினால் அடித்து கொள்ளவும். (குறிப்பு : இப்படி தண்ணீர் சேர்த்து
நன்றாக Beat செய்து கொள்வதால் ஆம்லெட் மிகவும் Fluffyஆக இருக்கும்.)
·
இத்துடன்
வதக்கிய பொருட்கள் + சில்லி ப்ளோக்ஸ் சேர்த்து
கலந்து கொள்ளவும்.
·
Panயினை
சூடாக்கி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் கலந்து வைத்துள்ள கலவையினை வைத்து ஆம்லெட்
ஊற்றவும்.
·
ஒருபக்கம்
நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு வேகவிடவும். நன்றாக வெந்த பிறகு, ஆம்லெட் மீது
cheeseயினை வைக்கவும்.
·
English
Muffinsயினை Toast செய்து கொள்ளவும். அதனுள் ஆம்லெடினை அதே வடிவத்தில் வெட்டி நடுவில்
Sandwich மாதிரி வைக்கவும்.
·
குழந்தைகளுக்கு
ஏற்ற ஈஸியான Healthyயான Lunch Box ரெடி. இத்துடன் ஏதாவது பழம் அல்லது பழ ஜுஸ் வைத்து
அனுப்பலாம்.
குறிப்பு :
இதில் ப்ரோக்கோலி + சீஸ்
சேர்ப்பதால் மிகவும் ஹெல்தியாக இருக்கும்.
இதே மாதிரி அவரவர் விருப்பத்திற்கு
ஏற்றாற் போல காய்கள் சேர்த்து கொள்ளலாம்.
காரத்திற்கு chili
Flakesயிற்கு பதிலாக மிளகுதூள் சேர்த்து கொள்ளலாம்.
English Muffinயிற்கு பதிலாக
எந்த வித Breadயினையும் பயன்படுத்தலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
"அட... போங்க... இப்படி வித்தியாசமா சொன்னா எப்படி...?"
நானில்லை... வீட்டில்...!
sooperb lunch box dish.. good one
very healthy and delicious lunch box dish...
சூப்பராக வந்திருக்கு.
Healthy School lunch box recipe!!!.Can you please give us more Kids lunch box ideas
Nice School Lunch box recipe!!!Can you please give us more kids school lunch(es) ideas or recipes
Healthy and color full...semma super ah irruku
http://myhomeformypassion.blogspot.in/
Post a Comment